வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:04 IST)

தெலுங்கில் மூன்றாவது படம்… தனுஷ் காட்டில் அடைமழை!

நடிகர் தனுஷ் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா, பாலிவுட்  மற்றும் ஹாலிவுட் என சுற்று சுற்றி வந்துவிட்டார். இந்நிலையில் இப்போது வரிசையாக எக்கசக்கமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் திடீரென அவருக்கு மார்க்கெட் எகிற ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஆர் எக்ஸ் 100 மற்றும் மகா சமுத்திரம் ஆகிய படங்களை இயக்கிய அஜய் பூபதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.  தெலுங்கு படங்களில் நடிக்க அவர் கூடுதலாக சம்பளம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.