1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed shami scalped 4 wickets in comeback match

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

முகமது ஷமி
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதை உறுதிப் படுத்தும் விதமாக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பவுலிங் பயிற்சியை பெங்களூருவில் மேற்கொண்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக மத்தியப் பிரதேச அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அவர் முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். 19 ஓவர்கள் வீசிய அவர் 54 ரன்கள விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலியா தொடருக்கு முழுத் தகுதியுடன் திரும்பி வருவது உறுதியாகியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?