எண்ணிக்கை அதிகமாகிடுச்சு… ஆனா தரம் – கடுப்பான விஜய் சேதுபதி ரசிகர்கள்!

Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:57 IST)

நடிகர் விஜய் சேதுபதி கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக வரிசையாக வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதி நடித்து முடித்து ரிலிஸுக்காக பல படங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் நான்கு படங்கள் இந்த மாதம் வெளியாக உள்ளன. அதில் கடந்த வாரம் துக்ளக் தர்பார் மற்றும் லாபம் ஆகிய இரு படங்களும் வெளியாகி மோசமான வரவேற்பைப் பெற்றன.

இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தேமே என்று வந்து போகிறார். அதிலும் துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியா என்று சொல்லுமளவுக்கு தட்டையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்ததில் அவர் படத்தின் தரம் மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :