ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (08:36 IST)

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று நடந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி திலக் வர்மாவின் சதம் மற்றும்  அபிஷேக் ஷர்மாவின் அரைசதம் ஆகியவற்றின் மூலம் 219 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் இந்திய அணியில் மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக ஆடி தன்னுடைய முதல் டி 20 சதத்தை அடித்தார். 32 பந்துகளில் நிதானமாக ஆடி அரைசதம் அடித்த அவர் அடுத்த 19 பந்துகளில் சதத்தை அடித்தார். அவருடைய இந்த அதிரடி இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடக்கம். வெற்றிக்கு காரணமாக இருந்த அவருக்கு ஆட்டநாயகன் விருதளிக்கப்பட்டது.

அதன் பின்னர் பேசிய அவர் “ இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்பது என் கனவு, இந்த சதம் அணிக்குத் தேவையான சரியான நேரத்தில் வந்துள்ளது. என்னால் என் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. இதற்கான காரணம் முழுக்க கேப்டன் சூர்யகுமார் யாதவ்வையே சேரும். அவர்தான் என்னை மூன்றாமிடத்தில் இறக்கிவிட்டு என் விருப்பம் போல ஆடச்சொன்னார். பிட்ச்சின் இரண்டு பக்கங்களும் இரு வேறு விதமாக இருந்தன. அதனால் முதலில் பேட் செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.