செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (08:37 IST)

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

இந்திய அணிக்கு ஐபிஎல் மூலமாகக் கிடைத்த இன்னொரு உறுதியான வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். டி 20 போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர பவுலராக உருவாகி வேகமாக வளர்ந்து வருகிறார்.

நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி 20 போட்டியில் அவர் மூன்று விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 59 போட்டிகளில் அவர் 92 விக்கெட்களை வீழ்த்தி சஹாலுக்குப்(96 விக்கெட்கள்) பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இரண்டரை ஆண்டுகளே ஆகும் நிலையில் அவர் இத்தகைய சாதனையை வெகு சீக்கிரமாகவே எட்டியுள்ளார். விரைவில் 100 டி 20 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார்.