ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (16:42 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்; வீரர்கள் இரங்கல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி  இன்று காலமானார். அவருக்கு வயது 77
 
1967 முதல் 1979 வரை இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28.71 சராசரியில் 266 விக்கெட்டுகளை வீழ்த்திய புகழ்பெற்ற இடது கை சுழற்பந்து வீச்சாளர். . அவர் சிறந்த கேப்டனாகவும் இருந்தார். அவரது தலைமையில் இந்தியா 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 வெற்றிகள் கிடைத்துள்ளது.
 
கடந்த 1971 இல் இங்கிலாந்து மற்றும் 1974-75 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
 
ஓய்வுக்குப் பிறகு பிரபலமான வர்ணனையாளர் மற்றும் கட்டுரையாளராகவும் இருந்தார்
 
பேடியின் மரணம் இந்திய கிரிக்கெட்  வரலாற்றில் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva