ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:22 IST)

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னணி வீரரான ஷமி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான செய்தியினை வெளியிட்டு அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றா அவரது முன்னாள் மனைவி ஹாசின் ஜகான்.

இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களின் மகள் ஹாசினோடு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகளை சந்தித்ததாகவும், அவருக்கு விருப்பமான பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் ஷமி.

ஆனால் இப்போது அந்த வீடியோ குறித்து விமர்சனத்தை வைத்துள்ளார் ஹாசின். அதில் “ஷமி என் மகளின் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதை அடுத்து அதில் கையெழுத்திடவே மகளை சந்தித்தார். ஆனால் கையெழுத்து போடாமல் அவரை ஷாப்பிங் அழைத்துச் சென்றுள்ளார். அவர் விளம்பர தூதராக இருக்கும் நிறுவனத்தின் கடைக்கு அழைத்துச் சென்று பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்நிறுவனத்தில் அவர் எந்த பொருட்கள் வாங்கினாலும் அதற்கு பணம் பெற மாட்டார்கள். இலவசப் பொருட்களையே அவர் தன் மகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். என் மகள் கிடாரும் கேமராவும் வேண்டும் என விரும்பினாள். ஆனால் அவர் அதை வாங்கித் தரவேயில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.