ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (15:42 IST)

ஐசிசி தொடர்களில் விராட் கோலி புதிய சாதனை

kohli
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணியில் உள்ள அணி இந்திய அணி.  இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார். இவருக்கு முன்னதாக அணியைத் தலைமைத் தாங்கியவர் விராட் கோலி.

பேட்டிங்கில் தலைசிறந்த வீரரான இவர் பல சாதனைகள் படைத்துள்ளார். முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடந்து வரும் நிலையில்,  கடந்த போட்டியில்விராட் கோலி 98 ரன்கள் அடித்தபோது கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். அத்துடன் 13 ஆயிரம் ரன்களை கடந்த 5 வது வீரரானார்.

சச்சின் 321 இன்னிங்ஸில் படைத்த சாதனையை கோலி 267 இன்னிங்ஸில் படைத்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 47சதங்கள் அடித்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் 77 சதங்கள் அடித்து சச்சினுக்கு (100)அடுத்த இடத்தில்  உள்ளார் கோலி.

இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் 3 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.