வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 21 அக்டோபர் 2023 (21:37 IST)

WorldCup-2023 : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி!

south africa-England
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடந்து வரும் இத்தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இங்கிலாந்து அணி மோதியது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பில் கிளேசன் 109 ரன்னும், ஹென்டிரிக்ஸ் 85  ரன்னும், மேக்ரோ 75 ரன்னும் அடித்தனர்.

இதையடுத்து, 400 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. இதில், இங்கிலாந்து தரப்பில், மார்க் வுட் 43 ரன்னும், ஆட்கின்சன் 35 ரன்னும், புரூக் 17 ரன்னும் அடித்தனர். எனவே 22 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது.

இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ஜிடி 2விக்கெட்டும், ஜேன்சன் 2 விக்கெட்டும் ஜெரால்ட் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.