வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:55 IST)

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து நாளை இரு அணிகளும் மோதும் டி 20 தொடர் நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் கேப்டன் சூர்யகுமார் அணியின் பேட்டிங் வரிசை குறித்து பேசியுள்ளார். இந்திய டி 20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில் டி 20 தொடருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் இந்த தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள் என்று சூர்யகுமார் அறிவித்துள்ளார்.

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.