செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

sa vs eng
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
நேற்று நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 334 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் 134 ரன்கள் எடுத்து மிக அபாரமாக பேட்டிங் செய்த டூசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது