வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (15:05 IST)

ஸ்கர்ட் அணிந்தாலே தப்பா நடந்துக்குறாங்க..! – இங்கிலாந்து மாணவிகள் புகார் மனு!

skirt
இங்கிலாந்தில் பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவிகள் மீது அதிகளவில் பாலியல் சீண்டல்கள் நடைபெறுவதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு பள்ளி சீருடையாக சட்டையும், மினி ஸ்கர்ட்டும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த மாணவிகள் பலர் தாங்கள் பள்ளி சீருடை அணியும்போது பாலியல்ரீதியான சீண்டலுக்கு உள்ளாவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

சாதாரண உடையில் செல்லும்போது வரும் பாலியல் கிண்டல்கள், சீண்டல்களை விட பள்ளி சீருடையில் இருக்கும்போது அதிகமானவற்றை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர். மேலும் அதற்கு காரணம் ஆபாச படங்களில் நடிகைகள் பள்ளி சீருடையில் வருவதுதான் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லண்டனில் உள்ள பாலியல் பொருட்கள் விற்பனையகங்களிலும் விலை மாதர்கள் உள்ளிட்டவர்களுக்கு பள்ளி சீருடைகள் விற்பனை செய்வதை சுட்டிக்காட்டியுள்ள மாணவர் நல அமைப்பு பள்ளி சீருடையை ஆபாசத்துடன் இணைத்து வீடியோக்கள் வெளியிடுவது பொருட்கள் விற்பதும் இந்த மாதிரியான சீண்டல்கள் அதிகரிக்க காரணம் என கூறுகின்றனர்.

எனவே ஆபாச படங்களில் பெண்கள் பள்ளி சீருடை அணிந்து வருவது போன்ற காட்சிகளுக்கு தடை செய்ய வேண்டும். பாலியல் பொருட்கள் விற்கும் கடைகளில் சீருடை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 13,400 மாணவிகள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது இங்கிலாந்தில் பிரதமருக்கான தேர்தல் நடந்து வரும் நிலையில் தேர்தலுக்கு பின் தேர்வாகும் பிரதமர் இதுகுறித்து என்ன முடிவு எடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.