1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (17:48 IST)

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

Ben stokes
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்கள் அடித்து அவுட் ஆனார்
 
இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமாகி உள்ளனர். பென் ஸ்டோக்ஸ் 31 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவர் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இருப்பினும் அவர் தனது ஓய்வு முடிவில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது