கபடி மாஸ்டர்ஸ் தொடர்: 55-15 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா அபார வெற்றி
இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு நாட்டின் அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி கென்யா அணியுடன் மோதியது. ஏற்கனவே மூன்று லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட இந்தியாவுக்கு இந்த போட்டி நான்காவது லீக் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில். இந்திய வீரர்களை தாக்கு பிடிக்க முடியாமல் கென்ய வீரர்கள் திணறினார்கள். இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் இந்திய அணிக்கு புள்ளிகள் அதிகரித்து கொண்டே சென்றது. கென்ய அணியின் புள்ளிகள் ஆமை வேகத்தில் சென்றது.
முதல் பாதியில் இந்திய அணி 29-5 என முன்னிலை வகித்த நிலையில் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதியில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.