1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (16:07 IST)

இந்தியா - அயர்லாந்து மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்!

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை டப்ளினில் தொடங்குகிறது.
 
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டெஸ்டில் விளையாடுகிறது.
 
இந்த தொடர் வரும் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டது. அதன்படி இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை டப்ளினில் இரவு 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
 
இரு அணிகளின் விவரம்;- அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), , ஜேம்ஸ் ‌ஷனான், ஷிமிசிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன், லிட்டில், டாக்ரெல், பீட்டர் சேஸ், ரேன்கின், ஸ்டூவர்ட் பாய்ன்டர், பால்பிரின், வில்லியம் போர்ட்டர் பீல்டு, கெவின் ஓபிரையன், மெக்பிரின், ஜோசுவா 
 
இந்தியா - விராட் கோலி (கேப்டன்), தோனி, ரோகித் சர்மா, ரெய்னா, தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், யசுவேந்திர சஹால், பும்ரா, தவான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா.