ஆய்வு நடத்த ஆளுனருக்கு அதிகாரம் உள்ளது உண்மைதான், ஆனால்...வைகோ சொல்ல வருவது என்ன?
ஆளுனருக்கு ஆய்வு நடத்த அதிகாரம் உள்ளது என்பது உண்மைதான், ஆனால் இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுனர் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருவது பெரும் சர்ச்சையாக இருந்து வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் ஆளுனரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும் என்றும், அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; அந்த அதிகாரம் இந்தியாவில் இல்லை என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேலும் தொழில் முனைவோர் தன்னை சந்திக்கலாம் என்ற ஆளுநருக்கு எந்த சட்டப்பிரிவில் அதிகாரம் உள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் ஆளுனரின் பணியை பாதிக்கும் வகையில் போராட்டம் செய்வோர்களுக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம் என்று சட்டப்பிரிவில் உள்ளதாக ஆளுனரின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது