வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (22:17 IST)

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா? ஆய்வு முடிவை ஏற்க மறுத்த பெண்கள் அமைப்பு

இங்கிலாந்து நாட்டின் தாமஸ் ராய்ட்டர்ஸ் என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் ஒன்றை ஆய்வு செய்து அதன் முடிவை அறிவித்தது. இந்த ஆய்வு முடிவில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்தியாவை விட பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக பல நாடுகள் இருக்கும் நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவை முதல் நாடாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர், முதலமைச்சர் முதல் பல உயர்ந்த பதவிகளில் பெண்களை உட்கார வைத்து அழகு பார்த்த நாடு இந்தியா. எனவே இந்த ஆய்வின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்ற தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வின் முடிவை தேசிய மகளிர் ஆணையம் ஏற்க மறுப்பு அறிவித்துள்ளது. இந்த முடிவு உள்நோக்கமானது என்று பலரும் கூறி வரும் நிலையில்  தேசிய மகளிர் ஆணையம் இந்த முடிவை ஏற்க மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது