தோனிக்கு இந்த போட்டியில் ஒரு சிறப்பு: என்ன தெரியுமா?
தோனிக்கு இந்த போட்டியில் ஒரு சிறப்பு: என்ன தெரியுமா?
இன்று நடைபெறும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி சற்றும் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது
இந்த நிலையில் இன்றைய போட்டி எம்எஸ் தோனி வெற்றியை தேடித்தரும் போட்டியாக மட்டுமன்றி தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு சிறப்பான போட்டியாக அமைந்துள்ளது இன்றைய போட்டி தோனிக்கு 200வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சமீபத்தில் விராட் கோலி 200ஆவது போட்டியை விளையாடினார் என்பது தெரிந்ததே அந்த வகையில் தற்போது தோனியும் தனது 200-வது போட்டியை இன்று விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
200வது போட்டியில் விளையாடும் தல தோனிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்