செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (16:52 IST)

’’ஒரே தலை தான்....அவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்...’’ கே.எஸ்.ராகுல் டுவீட்

நேற்று சன் ரைசர் ஐதரபாத் அணிக்கும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டி டை ஆனது.

இதையத்து சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எஸ்.ராகுலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் ஒருவர் தல என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த கே.எஸ்.ராகுல் தல என்று ஒருவர் தான் இருக்கிறார். அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.

தல தோனி என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் தனது முன்னாள் கேப்டனும், தன்னை அணியில் சேர்க்க உதவியவருமான தோனிக்கு இதன் மூலம் கௌரப்படுத்தியுள்ளார் கே.எஸ்ராகுல் என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.