200 ஆவது ஐபிஎல் போட்டி..தோனி இன்று படைக்க உள்ள மைல்கல்!

Last Updated: திங்கள், 19 அக்டோபர் 2020 (12:17 IST)

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இன்று தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியை விளையாட உள்ளார்.

சென்னை அணி ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய அணிகளில் ஒன்றாகும். 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே அணி தொடங்கப்பட்டதில் அந்த அணிக்கு கேப்டனாக தோனிதான் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியை விளையாட உள்ளார். இதுவரை இந்த மைல்கல்லை யாருமே எட்டியதில்லை. அவருக்கு அடித்த இடத்தில் ரெய்னா 194 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த மைல்கல்லை எட்டும் இன்றாவது தோனி மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்புவாரா என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 9 ஆட்டங்களில் தோனி 147 ரன்களையே எடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :