வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (17:39 IST)

இன்று புதுமுகங்களுக்கு இடமுண்டா? சிஎஸ்கே அணி எப்படி இருக்கும்?

ஐபிஎல் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் ராஜஸ்தான் அணி ஆகிய இரண்டு அணிகளும் வாழ்வா சாவா என்ற நிலையில் களத்தில் இறங்குகின்றன. 
மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை இரண்டு அணிகளுக்கும் உள்ளது
 
இந்த நிலையில் இரு அணிகளும் இந்த போட்டியில் வெல்வதற்காக வியூகங்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆடும் லெவன் அணியில் இரு அணிகளிலும் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்று இளைஞர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
எனவே இன்றைய போட்டியில் வாட்சன், டீபிளஸ்சிஸ், சாம் கர்ரன், அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, ருத்ராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், தீபக் சஹார், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் தோனியின் மனதில் என்ன உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்