வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (10:51 IST)

34 வயதிலேயே ஓய்வை அறிவித்த மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வீரர்களில் ஒருவரான கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வீரராக கவனம் ஈர்த்தவர் கிறிஸ் மோரிஸ். ஆனால் அவருக்கு மிகப்பெரிய பிரபல்யத்தை பெற்று தந்தது ஐபிஎல் தொடர்தான். கடைசியாக ராஜஸ்தான் அணிக்காக 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர் விளையாடவில்லை.

மேலும் தென் ஆப்பிரிக்க அணியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய 34 வயதிலேயே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக 42 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.