1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2024 (07:55 IST)

கோலியின் செயல் தேவையற்றது… ரவி சாஸ்திரி கண்டனம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது.

இந்த போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய அணியின் 19 வயது இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பும்ரா பந்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி ‘யார்றா இந்த பையன்?’ என வியக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியில் கோன்ஸ்டாஸ் பேட் செய்துகொண்டிருந்த போது ஓவர்களுக்கு இடையில் கோலி நடக்கும் போது கோன்ஸ்டாண்டின் தோளில் உரசினார். இதையடுத்து இருவரும் முறைத்துப் பார்த்துக் கொண்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் கோலிக்குப் போட்டியின் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோலியின் செயலை விமர்சித்துள்ள ரவி சாஸ்திரி “போட்டியின் சூடான தருணத்தில் இதுபோன்ற காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம்தான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. யாருமே இதுபோன்ற விஷயங்களைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு” எனக் கூறியுள்ளார்.