இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று… தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடுவாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து தனது இடத்தை தக்கவைக்க போராடி வருபவர் வாஷிங்டன் சுந்தர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் கூட சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு இடம் கிடைத்திருந்தது.
இதற்காக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அவர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கடந்தவாரம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சேர்ப்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.