புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (17:30 IST)

ஸ்மித்தின் சதம் ; ஷமியின் அசத்தல் பவுலிங் – இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 286 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிதான் தொடரை கைப்பற்ற முடியும். இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. ஹிட்ஸ்மேன்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரை குறைந்த ரன்களிலேயே இந்தியா அவுட் ஆக்கிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் வழக்கத்தை விட குறைந்துள்ளது.

ஆனாலும் அதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி சரிவைத் தடுத்தனர். 54 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார் லபுஷான். ஆனாலும் தொடர்ந்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் தனது 9 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய அவர் 117 பந்துகளில் 100 ரன்களக் கடந்த அவர், 131 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

அதன்  பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜடேஜா இரண்டு விக்கெட்களும் குல்தீப் மற்றும் சைனி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.