தோள்பட்டை காயத்தால் தவான் வெளியேற்றம்! பேட்டிங் செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Shikar dhawan
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 19 ஜனவரி 2020 (16:21 IST)
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் ஷிகர் தவான் காயத்தால் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரில் இதுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிதான் தொடரை கைப்பற்ற முடியும். இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. ஹிட்ஸ்மேன்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரை குறைந்த ரன்களிலேயே இந்தியா அவுட் ஆக்கிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் வழக்கத்தை விட குறைந்துள்ளது.

பீல்டிங்கில் ஈடுபட்டபோது ஷிகார் தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக சாஹல் பீல்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் ஷிகார் தவான் பேட்டிங் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷிகார் பேட்டிங் செய்யவில்லை என்றால் இந்திய அணியின் ரன்ரேட்டில் கணிசமான அளவு குறையும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் ஓய்வெடுத்துக் கொண்டு தவான் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :