வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (12:21 IST)

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பேட் அனுப்பிய சச்சின்! – மகிழ்ச்சியில் சிறுவன்!

மாற்றுத்திறனாளி சிறுவன் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவை புத்தாண்டில் ஷேர் செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ’புத்தாண்டை இந்த உத்வேகமான வீடியோவோடு தொடங்கலாம்” என பதிவிட்டிருந்தார்.

அத்தோடு இல்லாமல் தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை சிறுவன் மட்டா ராமுக்கு பரிசாக அனுப்பியுள்ளார். அதனுடன் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் சிறுவனை பாராட்டியதுடன், தொடர்ந்து விளையாடுமாறு உற்சாகப்படுத்தியுள்ளார். சச்சின் அளித்த இந்த பரிசால் மகிழ்ச்சியடைந்த சிறுவன் சச்சினை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.