டாஸ் வென்று பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா: 2 விக்கெட்டுக்களை இழந்து திணறல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. கடந்த இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இன்றைய போட்டியில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்தது
இந்த நிலையில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, ஆரம்பத்திலேயே வார்னர் மற்றும் பின்ச் விக்கெட்டை இழந்தது. வார்னர் 3 ரன்களில் ஷமி பந்துவீச்சில் அவுட்டானார் .பின்ச் 49 ரன்களில் ரன் அவுட்டானார்
இந்த நிலையில் ஸ்மித் மற்றும் லாபிசாஞ்சே ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர் சற்றுமுன் வரை ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் இன்று அபாரமாக பந்துவீசி 200 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தி விட்டால் மிக எளிதில் வெற்றி பெறுவவதோடு தொடரையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது