இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

Last Modified ஞாயிறு, 19 ஜனவரி 2020 (17:00 IST)
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணிக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ஆடவர் சீனியர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான தேர்வாளர்கள் பணியிடத்தில் தலா 2 இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் மகளிர் கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணியிடத்தில் 5 இடங்கள் காலியாக உள்ளது

ஆடவர் சீனியர் அணி தேர்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர் 7 டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது 30 முதல் தர போட்டிகளிலோ அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளிலோ விளையாடியிருக்க வேண்டும். அதேபோல் ஜூனியர் அணி தேர்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர், 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :