செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (17:35 IST)

மத்திய அரசின் மீது வழக்கு தொடர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை!

archana kamadh
மத்திய அரசின் மீது வழக்கு தொடர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை!
டேபிள் டென்னிஸ் வீராங்கனை மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உலக டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் 4வது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் அர்ச்சனா காமத். இவர் இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார் 
டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வகுத்துள்ள தேர்வு அளவுகோல்களை அர்ச்சனா காமத் பூர்த்தி செய்யவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அர்ச்சனா காமத் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது