செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (17:39 IST)

நடிகை மீராமிதுன் மீதான வழக்கு...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளவர் மீரா மிதுன். இவர் அவ்வப்போது, சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர். 

பட்டியலின மக்கள் குறித்து இவர் அவதூறாகப் பேசிய வீடியோ பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் இவர்   மீது புகார் கொடுக்கப்பட்டது.

எனவே, இவர் மீது வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மீராமிதுனையும் அவரது நண்பரையும் கைது செய்தனர்.பின்னர் இருவரும் ஜாமீனில்விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இருவரும் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரரி இருவரும் சென்னை  நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு வரும் 23 ஆம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம். இருவரும் அன்றைய தினம் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது