செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2024 (08:05 IST)

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி பிரதமர் லெவன் அணியோடு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியின் முதல் நாள் மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் 50 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.

பின்னர் போட்டி மழையின் காரணமாக 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ய பிரதமர் லெவன் அணி 43.2 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி இந்திய அணி 46 ஓவர்களில் 257 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ஷுப்மன் கில் அரைசதம் அடித்தார், நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 42 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர்.