1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (13:24 IST)

ராகுல்காந்தியை விசாரிக்கக் கூடாது..! போராட்டம் செய்த ஜோதிமணி எம்.பி கைது!

Jothimani
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய எம்.பி ஜோதிமணியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சுமார் 8.30 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை இன்றும் ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை நடைபெற்று வரும் அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி பலத்த காவல் போடப்பட்டுள்ளதுடன், 144 தடை உத்தரவும் உள்ளது.

இந்நிலையில் ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து ஜோதிமணி எம்.பி தலைமையில் காங்கிரஸ் மகளிரணி அமலாக்கத்துறையை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீஸார் ஜோதிமணி எம்.பியை தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.