பேட்டிங் செய்தபோது சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர்

play
Last Updated: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (17:55 IST)
மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூரை சேர்ந்த பல அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மைதானத்தில் இரு அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெயில் அதிகமாக இருந்தது. அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த வைபவ் கேஸ்கர்(24) என்ற இளைஞர் சுருண்டு விழுந்து இறந்தார்.
cri
 
 
பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அந்த இளைஞரின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :