மும்பை அழகி அபூர்வா 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2019' ஆக தேர்வு
மும்பையைச் சேர்ந்த அழகி அபூர்வா தாகூர் என்பவர் 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2019' பட்டத்தை வென்றுள்ளார்.
டெல்லியை அடுத்த பிலிம் சிட்டியில் மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா போட்டி நடந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த அபூர்வா தாகூர் 'மிஸ் டீன் யுனிவர்ஸ் 2019' பட்டம் வென்றார். இவருக்கு 2017ம் ஆண்டு மிஸ் டீன் அழகிப் பட்டம் வென்ற சிருஷ்டி கெளர் வாகை சூடி கெளரவித்தார்.
அபூர்வா தற்போது அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியாவில் இருக்கும் தாமஸ் ஜெப்பர்சன் பல்கலைகழகத்தில் இளநிலை கட்டிடக்கலை படிப்பு படித்து வருகிறார். டீன் அழகியாக தேர்வாகியுள்ள இவர் அமெரிக்காவிலுள்ள பனாமாவில் நடைபெறும் அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்.