திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (22:29 IST)

புரோ கபடி 2018: உபி, பெங்கால் அணிகள் வெற்றி

2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் உபி அணியும், பெங்கால் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய முதல் போட்டியில் உபி அணியும் மும்பை அணியும் மோதியது. இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தாலும் இறுதியில் சில நிமிடங்கள் போட்டி உபி அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்ததால் 34-32 என்ற புள்ளிகள்  கணக்கில் உபி அணி வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்கால் அணி, பாட்னா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்கால் அணி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்ததால் 39-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை எளிதில் தோற்கடித்தது