வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (18:47 IST)

284 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்.. முதல் வெற்றி கிடைக்குமா?

Afghanistan
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி  49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 284 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரரான ரமலானுல்லா அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். அதேபோல் இக்ரம் அலிகில் என்பவர் 58 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

சற்றுமுன் அந்த அணி ஏழு அவர்களின் இரண்டு விக்கெட் இழந்து  33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆப்கானிஸ்தான் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்து உள்ள நிலையில் முதல் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran