1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (20:00 IST)

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு...இந்த நாடு பங்கேற்க தடை

கடந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில்  நடைபெற்றது.
 
இந்த போட்டியில் அமெரிக்கா, இந்தியா,சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், அமெரிக்கா அதிகப் பதக்கங்கள் கைப்பற்றி முதலிடம் பெற்றது.
 
இந்த ஒலிம்பிக் போட்டியில், தடகளம், ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இருக்கும் நிலையில், வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
 
இதில், கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.அதேபோல், பேஸ்பால், ஸ்குவாஷ், ஷாப்ட்பால், பிளாக் புட்பால் ஆகிய 4 போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நீண்ட காலமாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.

ஆனால், இந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் ரஷ்ய நாட்டின் கொடியில்லாமல் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.