வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (17:23 IST)

24 கேரட் தங்க ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்த தமிழ் நடிகை..!

24 கேரட் தங்கத்தால் ஆன ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்து விட்டேன் என தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரபல நடிகர் மற்றும் தொழிலதிபர் லெஜன்ட் சரவணா நடித்த லெஜெண்ட் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை ஊர்வசி  ரவுட்டாலா. இவர் நேற்று இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு சென்ற நிலையில் அவர் தனது விலை உயர்ந்த ஐபோனை தொலைத்துவிட்டார்.

அந்த ஐபோன் 24 கேரட் தங்கத்தினால் ஆனது என்றும், அந்த ஐபோனை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்கிறோம் என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Siva