ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (21:55 IST)

ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு: ருத்ரதாண்டவம் ஆடிய தினேஷ் கார்த்திக்

இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வரும் 43வது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. இன்றைய போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் ருத்ரதாண்டவம் ஆடி அபாரமாக ரன் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி  20 ஓவர்களில்  6 விக்கெட்டுக்களை இழந்து  175 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தினேஷ் கார்த்திக் கடைசி வரை அவுட் ஆகாமல் 97 ரன்கள் எடுத்தார். இதில் ஒன்பது சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். ரானா 21 ரன்களும், கில் மற்றும் ரஸல் தலா 14 ரன்களும் எடுத்தனர்
 
ராஜஸ்தான் தரப்பில் ஆரோன் 2 விக்கெட்டுக்களையும், தாமஸ், கோபால், உனாகட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கப்பட்டது
 
இந்த நிலையில் 176 இலக்கை கொண்டு இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது. ரஹானே, சாம்சன், ஸ்மித், ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இந்த இலக்கை எட்ட உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்