டாஸ் வென்ற ராஜஸ்தான்: கடைசி வாய்ப்பை பயன்படுத்துமா?

Last Modified வியாழன், 25 ஏப்ரல் 2019 (19:42 IST)
ஐபிஎல் லீக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 43வது லீக் போட்டியாக கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது
இன்றைய போட்டியின் டாஸ் வென்ற ராயல் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித், முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். எனவே இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது

ராஜஸ்தான் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். கடைசி வாய்ப்பை அந்த அணி பயன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் கொல்கத்தா அணியும் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளதால் இன்றைய வெற்றி அந்த அணிக்கு முக்கியமான ஒன்றாகும்
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியில்
ஒஷானே தாமஸ் மற்றும் வருண் ஆரோனும் கொல்கத்தா அணியில் ப்ரஷித் கிருஷ்ணாவும் திரும்பியுள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :