தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தை நெருங்கும் புயல்? சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கா...?
- ஐபிஎல் இறுதிப்போட்டி இடமாற்றம் ; சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் – பின்னணி என்ன ?
- ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி: சென்னையையும் பின்னுக்கு தள்ளியது!
- குட்டிப்பாப்பாவுக்காக ஒரு ரன் எடுக்காமல் விட்டு கொடுத்தாரா தோனி?
- தோனியை பார்த்து கோலி பயந்த காரணம் இதுதான் !
டாஸ் வென்றது சிஎஸ்கே: பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 41வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தல தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியில் தாக்கூருக்கு பதில் ஹர்பஜன்சிங் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணியில் ஷாபாஸ் நடீமுக்கு பதில் மனிஷ்பாண்டே களமிறங்குகிறார். அதேபோல் வில்லியம்சனுக்கு பதிலாக இன்று ஷாகிப் அல் ஹசன் ஐதராபாத் அணியில் களமிறங்கவுள்ளார்.
இன்றைய சென்னை அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஜடேஜா, பிராவோ, ஹர்பஜன்சிங், தீபக் சஹார் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
அதேபோல் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, விஜய்சங்கர், மனிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரஷித்கான், புவனேஷ்குமார், காலில் அகமது மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோர் விளையாடவுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்