ராஜஸ்தானுக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முக்கிய போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வரும் இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்து கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 52 ரன்களும், ரஸல் 49 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியின் கவுதம், ஆர்ச்சர், லாஹ்லின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கோபால் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் அடுத்து சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இன்னும் சிறிது நேரத்தில் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.70 is the target to Rajasthan