ஜெயலலிதா வார்டில் சிசிடிவி கேமிராக்கள் அகற்றப்படது ஏன்? அப்பல்லோ விளக்கம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது அவரது வார்டு உள்பட பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து அப்போலோ நிர்வாகம் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது
அப்போதைய தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு பிரவேசி தேவை என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே ஜெயலலிதாவின் வார்டில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழுவினர்களிடம் தாங்கள் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் முன் எங்கள் மருத்துவர்கள் ஆஜராக மாட்டார்கள் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் அவர் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.