செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (12:08 IST)

ஜெயலலிதா மரணம்.. எங்களையே கேள்வி கேக்குறாங்க! – அப்போல்லோ மருத்துவமனை புகார்!

ஜெயலலிதா மரணத்தை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை புகார் அளித்துள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கருதப்படும் நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் இதுகுறித்து ஆணையம் விசாரித்து வருகிறது,.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தையும், மருத்துவர்களையுமே விசாரித்து வருவதாகவும், மற்ற அரசியல் கட்சி தலைவர்களை விசாரிக்காமல் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளது.