234 தொகுதிகளிலும் பிரச்சாரம் ஸ்டார்ட்!.. அதிரடியாக களமிறங்கிய திமுக!...
2020 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது பிரச்சார வேலைகளை துவங்கியிருக்கிறது.. தமிழ்நாடு தலை குனியாது என்கிற தலைப்பில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் துவங்கப்பட உள்ளது.
இந்த பரப்புரையின் கீழ் கழகத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திர பரப்புரையாளர்கள் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை மேற்கொள்வார்கள். இந்த பரப்பரையின் போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும்.
மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டவரை ஒரே இடத்தில் அழைத்துவந்து மண்டல பொறுப்பாளர்கள்/ மாவட்ட செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திர பரப்பளையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் கலந்து கொள்கிறேன் எதிர்பார்ப்புகள் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரையை வெற்றியடைய செய்திடும் வகையில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இதுகுறித்த விளம்பரங்களை செய்திட வேண்டும்.. தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.