வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (20:14 IST)

ஜெயலலிதா சிலை உரிய முறையில் பராமரிக்கப்படும்; அமைச்சர் பொன்முடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை உரியமுறையில் பராமரிப்பு செய்யப்படும் என முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது பிறந்த நாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள எந்த ஒரு தலைவரும் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலை அணிவிக்கும் வழக்கம் இல்லை என்றும் இனி வரும் காலங்களில் அன்னாரின் பிறந்தநாளன்று மேற்படி ஜெயலலிதா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அவரது பிறந்த நாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
 
முன்னதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையை அதிமுக சார்பில் பராமரிப்புக்கு அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைச்சர் பொன்முடி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது