திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (21:47 IST)

தமிழக முதல்வர் அறிவித்த பொது நகைக்கடன் தள்ளுபடியில் எங்கே நகைக்கடன் ? கரூரில் பரபரப்பு

gold loan
தமிழக முதல்வர் அறிவித்த பொது நகைக்கடன் தள்ளுபடியில் எங்கே நகைக்கடன் ? கரூரில் விஸ்வரூபமெடுக்கும் நகைக்கடன் தள்ளுபடி திமுக பெண் உறுப்பினர் அடிப்படை உறுப்பினர் அட்டையுடன் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், திருக்காம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 13.11.2020 ம் ஆண்டு 32 கிராம் எடையுள்ள தங்க நகைகளை 80,000 ரூபாயிக்கு, அதே கருப்பூர் பகுதியினை சார்ந்த ராஜா என்பவரது மனைவி சுந்தரி ஆடகு வைத்துள்ளார்.

இந்நிலையில் அதற்கு பிறகு வந்த தேர்தலில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக கொடுத்த அறிவிப்பின் படி இன்றுவரை நகைக்கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றும், திமுக உறுப்பினரான எனக்கே நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றும் கடந்த 13.11.2020 ம் ஆண்டு வைத்த நகையை ரிகார்டு மாற்றி 19.11.2020 ம் தேதி அன்று வாங்கி உள்ளேன் என்று வாக்குமூலம் எழுதி சொல்லியிட்ட சொன்ன நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தர்.

6 நாள் தாமதமாக வைத்துள்ளீர்கள் என்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகம் கூறியிருப்பதும், அந்த காரியத்தினை செய்ததே நீங்கள் தான் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண்மணி திமுக உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் நகைக்கடன்கள் வாங்கி ரசீது ஆகியவற்றுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முன்னதாகவே வாங்கப்பட்ட கடன்தொகைக்கு அவர்கள் கூறிய தேதியில் தான் பணம்பெற்றுக் கொண்டதாக மிரட்டி கையெழுத்து கேட்பதாகவும், தனக்கு நீதியும் வேண்டும், மிரட்டி கையெழுத்து வாங்க முயற்சித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அடுத்து முப்பது ஆண்டுகளாக திமுக கட்சியில் இருந்து வருவதாகவும் மேலும்  ஓட்டு போட்டதற்கு என்ன அர்த்தம் என்ன காரணம் எனது மாமனார் திமுக கட்சிக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக ஜெயிலுக்கு சென்றவர் என்றும் எங்களது குடும்பமே திமுக கட்சியை சார்ந்தவர்கள் தற்பொழுது இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாக்களித்தோம் உறுப்பினர் கார்டு கூட நாங்கள் வைத்திருக்கிறோம் எங்களுக்கு ஏன் நகை கடன் தள்ளுபடி வரவில்லை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ன தெரிவித்தார் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் மேல்முறையீடு செல்வதாக தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பெண்மணியால் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.