திங்கள், 31 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (13:38 IST)

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

Bussy Anand
இன்று நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் 2026ல் விஜய் தான் முதலமைச்சர் என உலகத்திற்கே தெரியும் என புஸ்ஸி ஆனந்த் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:
 
எங்ககிட்ட 15 லட்ச ரூபாய்க்கு ஒரு ஒன்றியம், 20 லட்சம் எனக்கு ஒரு ஒன்றியம் கொடுக்குறோம்னு பேட்டி கொடுக்க சொல்ற, என்னென்னமோ பண்ற, முதலமைச்சர் நான் தான்ன்னு போஸ்ட் அடிச்சு அஞ்சு பேரை வைத்து ஓட்ட விடுற.. என்னய்யா இது.. உலகத்துக்கே தெரியும் 2026ல் முதல் அமைச்சராக தளபதி விஜய் தான் அமருவார். அதற்காக நாங்கள் எல்லோரும் போராடுவோம், மக்களோடு மக்களாக இருந்து உழைப்போம்.
 
யார் எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி, 234 தொகுதிலும் நீங்கள் தான் வேட்பாளர், உங்கள் மகன் தான் வேட்பாளர், நாங்கள் வீர வசனத்தை பேசிவிட்டு கைதட்டல் வாங்கிட்டு போகிற கூட்டம் அல்ல, உங்களுக்காக உண்மையாக உழைக்கிற ஒரு உண்மையான கூட்டம் தான் இந்த கூட்டம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நமக்கு மொத்தம் 68, 360 பூத் இருக்கிறது, இதுவரை நம் 52,000 பூத்துக்கு ஆள் போட்டாச்சு, உண்மையா போட்டு இருக்கேன். கணக்குக்கு கிடையாதுங்க, தலைவருக்கு எல்லாம் தெரியும், எல்லாத்தையும் பார்ப்பாரு எல்லாத்தையும் கேட்பாரு’என்று புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

Edited by Mahendran