8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: எங்கெங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பொழிந்த நிலையில் இன்றும் பல பகுதிகளில் காலையில் இருந்தே மழை தொடர்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.